பொது

சிலாங்கூரில் போலீசார் ஒருவருக்கு கொவிட் -19 நோய் கண்டிருப்பது உறுதி

28/10/2020 05:48 PM

செர்டாங், 28 அக்டோபர் (பெர்னாமா) -- சிலாங்கூரில், இதுவரை சுபாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீசார் ஒருவருக்கும் காஜாங்கில் பணிபுரியும் போலீசார் ஒருவரின் மனைவிக்கும் கொவிட் -19 நோய் பரவி இருப்பது உறுதிச் செய்யப்பட்டிருக்கிறது.

அதோடு, சிலாங்கூரில் பணிபுரியும் 44 போலீசார், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக, அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் அசாம் ஜமாலுடின் தெரிவித்திருக்கிறார்.

'சுபாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணிபுரியும் ஒருவருக்கும், காஜாங் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் அவரது மனைவியும் அந்நோய் தொற்றி இருக்கிறது. மேலும் 44 போலீஸ் உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 44 பேர் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது,' என்று அவர் கூறினார்.

சிலாங்கூர், செர்டாங் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் டத்தோ நூர் அசாம் ஜமாலுடீன் இதனைத் தெரிவித்தார். இருப்பினும், இந்த எண்ணிக்கை மாநிலம் முழுவதும் இருக்கும் போலீசாரின் பணியைப் பாதிக்கவில்லை என்று நூர் அசாம் தெளிவுபடுத்தினார்.

-- பெர்னாமா