Tuesday, 20 Oct 2020
பொது
18/10/2020 08:45 PM

புத்ராஜெயா, 18 அக்டோபர் (பெர்னாமா) -- கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் சபாவில் அமல்படுத்தப்பட்டு வரும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (PKPB) கடுமையாக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியிருக்கிறது.

இது குறித்து தேசியப் பாதுகாப்பு மன்றத்திடம் கூடிய விரைவில் பரிந்துரைக்கப்படும் என்று சுகாதார தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். பொருளாதார துறை மட்டும் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் வேளையில், மற்ற துறைகள் மற்றும் ஒன்று கூடல் நிகழ்ச்சிகளை ஒத்தி வைப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் இலக்கிடப்பட்ட அணுகுமுறைகளைக் கையாளுவதற்கும் தமது தரப்பு முனைப்பு காட்டிவருவதாக டாக்டர் நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற சுகாதார அமைச்சின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே, நோய் பரவலைக் குறைக்க சிறைச்சாலைகளில் அமல்படுத்தி வரும் செயல்பாட்டுத் தர விதிமுறைகளை மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று நோர் ஹிஷாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

-- பெர்னாமா
 

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க