Friday, 23 Oct 2020
உலகம்
18/10/2020 08:16 PM

ஆக்லாந்து, 18 அக்டோபர் (பெர்னாமா) -- நியூசிலாந்து பொதுத்தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று, வெற்றிப் பெற்ற பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அரசாங்கத்தை அமைக்கவிருப்பதாக தெரிவித்தார். கொவிட்-19 நோயை சிறந்த முறையில் கையாண்ட காரணமாக ஆர்டர்னின் தொழிலாளர் கட்சி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இந்நிலையில், ஆர்டர்னின் ஆளும் தொழிலாளர் கட்சி 49 விழுக்காடு வாக்குகளை பெற்ற வேளையில், எதிர்க்கட்சியான தேசிய கன்சர்வேடிவ் கட்சி 27 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றிந்தது.

மெக்சிகோ சிட்டி

கொவிட்-19 நோய் கோர தாண்டவம் ஒரு புறமிருக்க, இறந்தோர் தினத்தை முன்னிட்டு மெக்சிகோவில் நடத்தப்படும் கண்காட்சியின் ஒரு பகுதியாக, சாலை ஓரங்களில் சுமார் 50 மண்டை ஓடு சிற்பங்கள் அலங்கரிக்கப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த கண்காட்சி மூலம் இத்தினம் மெக்சிகோ நாட்டின் கலாச்சார கொண்டாடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசில்

பிரேசிலில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து, சில தன்னார்வ மருத்துவர்கள் ரியோ டி ஜெனீரோவில் மருத்துவ முகாம்களை அமைத்து, அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு இலவச மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12-ஆம் தேதி பிரேசிலில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்திற்கான ஒரு சமூக முயற்சியின் ஒரு பகுதியாக இது அமைகிறது.

அர்ஜென்டினா

மத்திய அர்ஜென்டினாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த காட்டுத் தீயினால் பல மலைப் பகுதிகள் அழித்திருப்பதுடன், சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பில் இருக்கும் நிலப் பகுதிகள் சேதமாகியுள்ளன.

--பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க