Friday, 23 Oct 2020
பொது
18/10/2020 07:59 PM

கோலாலம்பூர், 18 அக்டோபர் (பெர்னாமா) -- கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து ரத்த தானப் பிரச்சாரங்கள் ரத்து செய்யப் பட்டிருப்பதால், தேசிய ரத்த மையத்தில் ரத்த கையிருப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில், ரத்த கையிருப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,தேசிய ரத்த மையம், இணையம் வழி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலக்கட்டத்தில், இரத்த தானம் செய்ய விருப்பம் கொண்டவர்களுக்கு தேவையான வசதிகளை  தேசிய இரத்த மையம் ஏற்பாடு செய்து வருகிறது.

இணையம் வழி கிடைக்கின்ற தகவல்கள் அடிப்படையில், சிலர் தேசிய இரத்த மையம் வருகை தந்து, இரத்த தானம் செய்வதையும் பெர்னாமா கண்டறிந்தது.

''நான் இங்கு இரண்டாம் முறையாக வருகிறேன். இதற்கு முன்னர் 4 முறை ரத்த தானம் செய்துள்ளேன். நாட்டில் மக்களுக்குத் தேவைபடும் இரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதைக் கேள்வியுற்ற பின் இரத்த தானம் மேற்கொண்டு மக்களுக்கு உதவலாம் என்று வந்துள்ளேன்,'' என்று தனேஸ்வரி குறிப்பிட்டார்.

''சபா, பேராக், பினாங்கு ஆகிய மாநிலங்களில் மிகவும் அவசரமாகத் தேவைபடுகின்றது என்ற தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் பிறகு நான் இங்கு இரத்த தானம் மேற்கொள்ள வந்துள்ளேன். இக்காலக் கட்டத்தில் நம் நாட்டில் இரத்த் தானம் மிகவும் முக்கியமாகத் தேவைபடுகின்றது,''  என்று சிவசீலன் ராஜ் தெரிவித்தார்.

B பிரிவைச் சேர்ந்த இரத்தம் தற்போது அதிகம் தேவைப்படுவதாக தேசிய இரத்த மையம் அண்மையில் தெரிவித்திருந்தது.

PKPB காலக்கட்டத்தில் கோலாலம்பூரில் உள்ள தேசிய இரத்த தான மையம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 தொடங்கி இரவு 8.00 வரையிலும், வார இறுதிகளில் காலை 8.00 முதல் இரவு 8.00 வரை செயல்படும்.

பிற மாநிலங்களில் இருப்பவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு சென்று இரத்த தானம் வழங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க