BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
பொது

கைதிகளுக்கு சுவாசக் கவசங்கள் பற்றாக்குறை

18/10/2020 07:52 PM

ஜார்ஜ்டவுன், 18 அக்டோபர் (பெர்னாமா) -- கைதிகள் பயன்படுத்துவதற்குச் சுவாசக் கவசங்கள் குறைவாக இருப்பதால் அரசு சார்பற்ற நிறுவனங்கள் அதனை நன்கொடையாக வழங்க முன்வர வேண்டும் என்று பினாங்கு சிறைச்சாலை கேட்டுக் கொண்டுள்ளது.

ரெமான்ட் மற்றும் செபாராங் பெராய் சிறைச் சாலைகளுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது 4500 சுவாசக் கவசங்கள் தேவைப்படுவதாக, பினாங்கு சிறைச் சாலையின் நிர்வாகி ரொஸ்லான் மொஹமாட் கூறினார்.

மேலும், சுவாசக் கவசக் குறைபாடு குறித்து சுகாதார அமைச்சுக்கும் தேசியப் பாதுகாப்பு மன்றத்திற்கும் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது அவர்கள் அனுப்பவிருக்கும் சுவாசக் கவச பொட்டலங்களுக்கு காத்திருப்பதாகவும் ரொஸ்லான் கூறினார்.  

''எங்களுக்கு சுமார் 2,300 சுவாசக் கவசம் தினமும் மாற்றுவதற்குத் தேவைப்படுகின்றது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே இருப்பதால், பிறருக்குப் பரவுவதைத் தவிர்ப்பதற்கு அதிகமான சுவாசக் கவசங்கள் தேவைப்படுகின்றன,'' என்று அவர் தெரிவித்தார்.

டத்தோக் கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் ஜகதீப் சிங் தியோவிடமிருந்து உணவுப்பொருட்கள், சுவாசக் கவசங்கள் மற்றும் கிருமிநாசினி திரவங்கள் போன்ற நன்கொடைகளைப் பெற்றுக் கொண்ட நிகழ்ச்சியில் ரொஸ்லான்  இவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா