Tuesday, 20 Oct 2020
18/10/2020 08:36 PM

புத்ராஜெயா, 18 அக்டோபர் (பெர்னாமா) -- நாட்டில் இன்று நண்பகல் 12 மணி வரையில் 871 புதிய கொவிட் -19 சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து அந்நோய்க்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,498-ஆக அதிகரித்திருக்கிறது.

அதோடு, இன்று மேலும் எழுவர் பலியாகி இருக்கும் வேளையில், அந்நோய்க்குப் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 187-ஆக உயர்ந்திருப்பதாக, சுகாதார தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

இன்று பதிவாகியச் சம்பவங்களில், 866 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியது என்றும் எஞ்சிய ஐந்து சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியது என்றும் டாக்டர் நோர் ஹிஷாம்  குறிப்பிட்டார்.

அதில், சபாவில் மிகவும் அதிகமாக அதாவது 702 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து பினாங்கில் 45 சம்பவங்களும், சிலாங்கூரில், 72 சம்பவங்களும்,  பேராவில் 10 கெடாவில் 9 சம்பவங்களும், பதிவாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதோடு, நான்கு புதியத் தொற்றுகளை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், இன்று அதிகமானோர், அதாவது 701 பேர் குணமடைந்திருக்கின்றனர்.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க