Friday, 23 Oct 2020
உலகம்
17/10/2020 10:05 PM

மெக்சிக்கோ, அக்டோபர் 17 (பெர்னாமா) -- மெக்சிக்கோவில் உள்ள விநியோக நிறுவனம் ஒன்றில்,10,000-கும் மேற்பட்ட சளிக்காய்ச்சல் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளன.

ஒரு வாரத்திற்கு முன்னர்தான், அங்கு 38,000 புற்றுநோய் மருந்துகள் திருடப்பட்டதாக, அமலாக்கத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

சுகாதார ஆபத்துகளுக்கு எதிரான பாதுகாப்பு மத்திய ஆணையம் (COFEPRIS), வாக்ஸிகிரிப் (VAXIGRIP) எனும் தடுப்பூசி திருடப்பட்டப் பின்னர் பொது மருத்துவமனைகளுக்குச் சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அக்டோபர் 12-ஆம் தேதி, லாரியில் இருந்து அந்த தடுப்பூசிகள் திருடப்பட்டதாகவும் அந்த ஆணையம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், மெக்சிக்கோ நகரின் சாலைகளில், புற்றுநோய் மருந்துகள் அடங்கிய 27 பைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அக்டோபர் 4-ஆம் தேதி, ஆயுதம் ஏந்திய கொள்ளையர்களால் ஆய்வகத்திலிருந்து திருடப்பட்டவை அவை தானா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

குழந்தைகளுக்குப் புற்றுநோய் மருந்துகளில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டது மற்றும் சளிக்காய்ச்சல் பரவலின் தொடங்கியிருப்பதை அடுத்து, அந்தத் திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

85,000-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த கொவிட்-19 தொற்றுடன் இந்நோய் இணைந்து பரவுவதைத் தடுக்க அமலாக்கத் தரப்பினர் சளிக்காய்ச்சல் தடுப்பூசி பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். 

திருடப்பட்ட தடுப்பூசிகளின் பாதுகாப்பு இனி உத்தரவாதம் இல்லாத காரணத்தால் மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் பயனீட்டாளர்கள் யாவரும் அவற்றை வாங்க கூடாது என்று COFEPRIS வலியுறுத்தியுள்ளது.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க