BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
பொது

பந்திங்கில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று மாணவர்கள் உட்பட ஐவர் காயம்

25/09/2020 09:36 PM

பந்திங்,  25 செப்டம்பர் (பெர்னாமா) -- சிலாங்கூர், பந்திங்கில் இருக்கும் இடைநிலைப்பள்ளி அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், இருவர் படுகாயங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். 

காயங்களுக்கு ஆளான அவ்விருவரும், BMW ரக காரில் தங்களைக் காப்பற்றிக் கொள்ள முயற்சித்த போது, மூன்று பள்ளி மாணவர்களை மோதியதாக, சிலாங்கூர் மாநில குற்றப் புலனாய்வு துறை தலைவர் டத்தோ அமாட் ஃபட்சில் தெரிவித்திருக்கிறார். 

இன்று நண்பகல் 12.45 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த இருவர் அக்காரை பின் தொடர்ந்ததாக DATUK AHMAD FADZIL தெரிவித்தார். 

அக்காரினுள் ஆடவர் ஒருவரும், அவரின் மெய்க்காப்பாளர் ஒருவரும் இருந்ததாக கூறப்படுகிறது. 

மோட்டார் சைக்களில் வந்த அடையாளம் தெரியாத ஆடவர்கள், அவ்விருவரையும் நோக்கி சரமாரியாக சுட்டப் போது, தங்களைக் காப்பற்றிக் கொள்வதற்காக, அவர்கள் பள்ளி அருகே வாகனத்தை செலுத்தியதாக நம்பப்படுகிறது. 

ஆயினும், கட்டுப்பாட்டை இழந்த அக்கார், மாணவர்களையும் அங்கிருந்த இதர வாகனங்களையும் மோதியதாக FADZIL குறிப்பிட்டார். 

நெஞ்சு மற்றும் உடல்களின் இதர பகுதிகளிலும் சுடப்பட்ட அவ்விருவரும் பந்திங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

அதோடு, கழுத்து மற்றும் காலிலும் காயத்திற்கு ஆளான அம்மூன்று மாணவர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். 

இந்நிலையில், இரண்டு கும்பல்களுக்கு இடையிலான சண்டையினால் நிக்ழந்ததாக நம்பபப்டும், இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

--பெர்னாமா