உலகம்

சில விளையாட்டுச் செய்திகளின் தொகுப்பு

22/09/2020 05:14 PM

ரோம், 22 செப்டம்பர் (பெர்னாமா) --2020-ஆம் ஆண்டின் இத்தாலிய பொது டென்னிஸ் போட்டியின் வெற்றியாளர் பட்டத்தை செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச் (NOVAK JOKOVIC) ஐந்தாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 

இந்த வெற்றியின் வழி ஜோக்கோவிச் 36 ஏ.டி.பி மாஸ்டர்ஸ் ( ATP MASTERS) டென்னிஸ் தொடர்களில் வெற்றி பெற்று, ஸ்பெனின் RAFAEL NADAL-லின் சாதனையை முறியடித்திருக்கின்றார். 

உலகின் முதன்நிலை ஆட்டக்காரரான நோவாக் ஜோக்கோவிச், அண்மையில் அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியில், கிராண்ட் ஸ்லாம் (GRAND SLAM)  விதிமுகளை மீறியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டு ஆட்டத்தை விட்டே வெளியேற்றப்பட்டார். 

அந்த சர்ச்சையை மறக்கடிக்கும் வகையில் நோவாக் ஜோக்கோவிச் 7-5, 6-3 என்ற நேரடி செட்களில், அர்ஜெண்டினாவின் DIEGO SCHWARTZMAN-னை தோற்கடித்து, வெற்றியாளர் கிண்ணத்தைக் கைப்பற்றினார். 

மிலான் (இத்தாலி)

 பெண்களுக்கான ஒற்றையர் பிரிவுக்கான வெற்றியாளர் பட்டம் முதன் முறையாக ரோமானியாவின் SIMONA HALEP--கு சொந்தமாகியுள்ளது. 

முதல் செட்டை, 6-0 என்று SIMONA HALEP-க்கு சாதகமாக முடிந்த வேளையில், நடப்பு வெற்றியாளரான KAROLINA PLISKOVA, காயம் காரணமாக இரண்டாம் செட்டின் பாதியில் ஆட்டத்திலிருந்து விலகிக்கொண்டார். 

இதனிடையே, இத்தாலி SERIA அ கிண்ண காற்பந்து போட்டியில், AC MILLAN 2-0 என்ற கோல்களில் BOLOGNA-வைத் தோற்டித்துள்ளது. 

அவ்விரு கோல்களையும் அதன் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரர், ZLATAN IBRAHIMOVIC போட்டிருக்கின்றார். 

 கோலாலம்பூர்

மலேசிய சூப்பர் லீக் கிண்ண போட்டியில், கெடா 3-1 என்ற கோல்களில் சபாவைத் தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை உறுதி செய்துகொண்டுள்ளது. 

முதல் பாதியில் ஒரு கோலையும் இரண்டாம் பாதியில் இரு கோல்களையும் அடித்திருக்கும் கெடாவிற்கு தொடர்ச்சியாக இது மூன்றாவது வெற்றியாகும். 

 - பெர்னாமா