உலகம்

வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு

21/09/2020 08:05 PM

மாட்ரிட், 21 செப்டம்பர் (பெர்னாமா) -- ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இன்று முதல், பகுதி முடக்கநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. வேலைக்குச் செல்லுதல், மருத்துவத் தேவை, பள்ளிக்குச் செல்லுதல் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 

ஆக்லந்து, நியூசிலாந்து

கொவிட்-19 நோய் காரணமாக, நியூசிலாந்தின் பல பகுதிகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன. இருப்பினும், ஆக்லாந்தில் அமல்படுத்தப்பட்டு வரும் கட்டுப்பாடுகள் இன்னும் 16 நாட்களுக்கு தொடரப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் தெரிவித்தார். 

ஆக்ரா, இந்தியா

இந்தியாவில் கொவிட்-19 நோய் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அந்நாட்டில் வழங்கப்படும் தளர்வுகள் அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல சுற்றுலாத் தளங்கள் செயல்பட தொடங்கியுள்ள வேளையில், உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான தாஜ் மஹால் இன்று மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. 

அமெரிக்கா 

கொவிட்-19 நோய்த் தொற்றின் பாதிப்பு முடிவடைந்த பின்னரும், சுமார் கோடி-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படலாம் என்று நோபல் விருது பெற்ற மலாலா தெரிவித்துள்ளார்.மேலும் இந்த பெருந்தொற்றால், பெண்கள் கல்வி கற்பதை மேம்படுத்தும் கூட்டு முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகவும் மலாலா கூறுகிறார். 

உலக அமைதி தினம்
 
ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21-ஆம் தேதி உலக அமைதி தினமாக அனுசரிக்கபட்டு வருகிறது. எந்த நாடும், பிற நாடுகளை தாக்கி துன்புறுத்தக் கூடாது, ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடக் கூடாது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உலக அமைதி தினம் கொண்டாடப்படுகிறது. 

-- பெர்னாமா