பொது

சிறிய ரக விமானத்தை தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது

21/09/2020 08:09 PM

ஜார்ஜ்டவுன், 21 செப்டம்பர் (பெர்னாமா) -- பினாங்கு தஞ்சோங் பூங்கா கடல் பகுதியில் விழுந்ததாகக் கூறப்படும் சிறிய ரக விமானம் ஒன்றின் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை போலீசார் புதிய தகவல்கள் கிடைக்கும் வரையில் நிறுத்தி வைத்திருக்கின்றனர். 

நேற்று பிற்பகல் 2 மணிக்கு நிகழ்ந்ததாக நம்பப்படும் அச்சம்பவம் தொடர்பில் ஏதாவது புதிய தடயம் கிடைத்தால் தமது தரப்பு மற்ற அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடரும் என்று திமோர் லாவூட் (TIMUR LAUT) மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. சோஃபியான் சந்தோங் கூறியிருக்கிறார். 

நேற்று மாலை 6.30 மணி வரையில் நடத்தப்பட்ட தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின்போது எந்தவொரு தடயமோ அல்லது அவ்விமானத்தின் உடைந்த பாகங்களோ கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். 

இன்று காலை வரையில், மலேசிய பொது வான் போக்குவரத்து அமலாக்கத் தரப்பினரான CAAM மற்றும் அச்சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு விமான நிறுவனத்திடம் இருந்து, சிறு ரக விமானமோ அல்லது விமானி காணாமல் போனதாகக் கூறப்படும் புகாரை தமது தரப்பு இன்னும் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

''யாரும் காணாமல் போனதாக குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து, புகாருக்காக நாங்கள் காத்திருக்கிறோம். விமானியோ அல்லது விமானிப் பணியாளர்கள் யாரும் காணவில்லை என்று, இன்று காலை வரையில் எங்களுக்கு எந்தவொரு புகாரும் கிடைக்கவில்லை. காலை 11 மணி வரையில் எந்தவொரு தரப்பிடம் இருந்து எந்தவொரு புகாரும் கிடைக்கவில்லை. தற்போதைக்கு, வழங்கப்பட்டிருக்கும் புகாரின் நம்பகத்தன்மை குறித்து விசாரிக்க போலீசார் விசாரணை அறிக்கையை திறந்திருக்கின்றனர்,'' என்று சோஃபியான் கூறினார்.

கடற்கரை ஓரங்களில் பணிபுரியும் பாதுகாவலர்கள், மீனவர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவ்வாறான சம்பவம் நிகழ்ந்ததை அவர்கள் யாரும் பார்க்கவில்லை என்று தெரிவித்ததாக, இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். 

50 வயதிற்கு உட்பட்ட இரண்டு மீனவர்கள் மற்றும் பாதுகாவலர் ஒருவரும் தீப்பெட்டி அளவிலான பொருள் ஒன்று, அதன் வால் பகுதியில் பலூன் கட்டப்பட்ட நிலையில் கடலில் விழுந்ததைக் கண்டதாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. 

நேற்று மாலை 6.30 மணி வரையில் நடத்தப்பட்ட தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின்போது எந்தவொரு தடயமோ அல்லது அவ்விமானத்தின் உடைந்த பாகங்களோ கிடைக்கவில்லை என்று சோஃபியான் தெரிவித்தார். 

இன்று காலை வரையில், மலேசிய பொது வான் போக்குவரத்து அமலாக்கத் தரப்பினரான CAAM மற்றும் அச்சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு விமான நிறுவனத்திடம் இருந்து, சிறு ரக விமானமோ அல்லது விமானி காணாமல் போனதாக கூறப்படும் புகாரை தமது தரப்பு இன்னும் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

கடற்கரை ஓரங்களில் பணிபுரியும் பாதுகாவலர்கள், மீனவர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவ்வாறான சம்பவம் நிகழ்ந்ததை அவர்கள் யாரும் பார்க்கவில்லை என்று தெரிவித்ததாக, இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சோஃபியான் தெரிவித்தார். 

50 வயதிற்கு உட்பட்ட இரண்டு மீனவர்கள் மற்றும் பாதுகாவலர் ஒருவரும் தீப்பெட்டி அளவிலான பொருள் ஒன்று, அதன் வால் பகுதியில் பலூன் கட்டப்பட்ட நிலையில் கடலில் விழுந்ததைக் கண்டதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. 

-- பெர்னாமா