Wednesday, 23 Sep 2020
பொது
16/09/2020 10:15 PM

சிபு, 16 செப்டம்பர் (பெர்னாமா) -- 1963-ஆம் ஆண்டு மலேசிய உடன்படிக்கை (MA63) படி, சபா மற்றும் சரவா மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் பேரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

மேலும் இந்த இரு மாநிலங்களின் உரிமைகள் குறித்து விவாதிக்க, சிறப்பு நடவடிக்கை குழுவை அமைப்பதற்கு, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் தெரிவித்தார்.

''செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம், 1963-ஆம் ஆண்டு மலேசிய உடன்படிக்கை தொடர்பாக ஒரு சிறப்பு நடவடிக்கை குழுவை அமைக்க ஒப்புக் கொண்டது. இதற்கு பிரதமராக நானே தலைமை தாங்குவேன்,'' என்று அவர் கூறினார்.

இந்த சிறப்பு நடவடிக்கை குழுவில் சரவா முதலமைச்சர், சபா முதலமைச்சர், மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்.

சரவா, சிபுவில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றும் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க