Friday, 25 Sep 2020
உலகம்
16/09/2020 08:01 PM

தோக்கியோ, 16 செப்டம்பர் (பெர்னாமா) -- ஜப்பான் நாடாளு மன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், யோஷிஹிடே சுகா அதிகாரப்பூர்வமாக அந்நாட்டின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

தோக்கியோவில் உள்ள அரண்மனையில், புதன்கிழமை பிற்பகல், பேரரசர் நருஹிடோ முன்னிலையில், யோஷிஹிடே சுகா பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

ஜப்பானில் சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் 71 வயதான சுகா, முன்னாள் பிரதமர்  ஷின்சோ அபே அறிவித்த திட்டங்களையும், பொருளாதார கொள்கைகளையும் தொடரப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். 

முன்னாள் அமைச்சர்கள் பலர் சுகாவின் புதிய அமைச்சரவையிலும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குறைந்த அளவிலான அரசதந்திர அனுபவங்களையே கொண்டிருக்கும் சுகா அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான பதற்றத்தையும் கவனமாகக் கையாள வேண்டும் என்று அந்நாட்டின் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

இதனிடையே, பதவி விலகலுக்கு முன்பதாக தமது இறுதி அமைச்சரவை கூட்டத்திற்கு இன்று ஷின்சோ அபே தலைமையேற்றார். 

அக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றப் பின்னர், தமது அலுவலகத்தில் இருந்து வெளியேறிய ஷின்சோ அபேவுக்கு அவரின் ஊழியர்கள் மரியாதை செலுத்தும் நிமித்தமாக கைத்தட்டி பூச்செண்டு வழங்கினர். 

ஜப்பானில் நீண்ட கால பிரதமராக பணியாற்றிய ஷின்சோ அபே உடல்நலக் குறைவை காரணமானாகக் கூறி கடந்த மாதம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். 

--பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க