Friday, 25 Sep 2020
16/09/2020 07:52 PM

கோலாலம்பூர், 16 செப்டம்பர் (பெர்னாமா) -- 2020-ஆம் ஆண்டின் மலேசிய தின கொண்டாட்டம் கொவிட்-19 நோய் தாக்கத்தின் மத்தியில் நாடு முழுவதிலும் புதிய இயல்புடன் எளிமையாக கொண்டாடப்படுகிறது. 

மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு PKPP அமலாக்கத்தில், நிர்ணயிக்கப்பட்டிருக்கும் செயல்பாட்டு தரவிதிமுறை, எஸ்.ஓ.பி-யைப் பின்பற்றி அக்கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும், இவ்வாண்டில் பல மாநிலங்களில் அதிகாரப்பூர்வ கொண்டாடங்கள் இடம்பெறவிட்டாலும் சில தரப்பினர் எளிமையான முறையில் கொண்டாடுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

பகாங்கில், மாநில அளவில் நடத்தப்பட்ட கொண்டாட்டத்தில், முதன்மை பணியாளர்களுடனான காணொளி அழைப்பு, கொவிட்-19 நோயை எதிர்கொள்ளும் நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன.

நெகரி செம்பிலானில், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமைப்பாட்டு துறை, LORONG CERIA MERDEKA, RUMAH CERIA MERDEKA என்ற போட்டியை உள்ளடக்கிய நிகழ்ச்சியுடன் தேசிய தினத்தின் கொண்டாடத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

பண்டார் வரிசான் புத்ரி ருக்குன் தெத்தாங்கா பகுதியின் ஒத்துழைப்புடன் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கப்பட்ட அப்போட்டியின் வெற்றியாளரை சுமார் 100 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்டது. 

மற்றொரு நிலவரத்தில், புதிய இயல்புடன் மலேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் பினாங்கு, தெலுக் பஹாங் தேசிய பூங்காவில் தன்னார்வ சுற்றுலா நிகழ்ச்சி ஒன்றுக்கு மாநில சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சின் ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்ச்சியில், நாட்டிற்காக உழைத்து, பணி ஓய்வுப் பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் பொருட்டு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. 

திரெங்கானுவில், புதிய சுற்றுலா தளமான கம்போங் புடாயா திரெங்கானுவில் மலேசிய தினம் கொண்டாடப்பட்டது.

அதில், மலேசிய உருவாக்கம் குறித்த வரலாறு மற்றும் தேசப்பற்று கவிதை படைப்பு  உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், தேசிய அளவிலான மலேசிய தினக் கொண்டாட்டம், இன்று சரவா, சிபுவில் எஸ்.ஓ.பி-யுடன் கொண்டாடப்படுகிறது.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க