Friday, 25 Sep 2020
பொது
16/09/2020 07:47 PM

புத்ராஜெயா, 16 செப்டம்பர் (பெர்னாமா) -- மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவான பி.கே.பி.பி-யை மீறிய குற்றத்திற்காக அரச மலேசிய போலீஸ் படை பிடிஆர்எம் நேற்று செவ்வாய்க்கிழமை 68 பேரை கைது செய்திருக்கின்றது.

அவர்களில் 66 பேருக்கு அபராதம் விதிக்கப் பட்டிருப்பதாகவும், எஞ்சிய இருவர் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருப்பதாகவும், தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார். 

கைது செய்யப்பட்டவர்களில், 21 பேர் பி.கே.பி.டி-யை மீறியதாகவும்,  சுயவிவரப் பதிவு தயார் செய்து வைக்காதது மற்றும் சுவாசக் கவசம் அணியாத குற்றங்களுக்காக 18 பேரும், தொடுகை இடைவெளியைப் பின்பற்றத் தவறியதற்காக 6 பேரும்,  தனிமைப்படுத்தலுக்கான கட்டணத்தை செலுத்த தவறியதற்காக மூவரும் மற்றும் சட்டவிரோத குடியேறிகள் இருவரும் கைது செய்யப்பட்டதாக இன்று புதன்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஒப் பெந்தெங் (OP BENTENG) நடவடிக்கையில் 120 சட்டவிரோதக் குடியேறிகளும் அவர்களை அழைத்து வந்த இருவரும் கைது செய்யப்பட்டதுடன், மூன்று படகும், நான்கு தரைப் போக்குவரத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

கடந்த ஜூலை 24-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 15-ஆம் தேதி வரையில் அனைத்துலக நுழைவாயில்கள் வழியாக 29,438 பேர் நாடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதிலும் இருக்கும் 72 தங்கும் விடுதிகளிலும், எட்டு பொதுப் பயிற்சி கழகங்கள் மற்றும் தனியார் கல்வி மையங்களிலும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

செப்டம்பர் 15-ஆம் தேதி வரை, 11 பச்சை மண்டல பகுதிகள் மற்றும் ஒரு மஞ்சள் மண்டல பகுதியை உட்படுத்திய 7 மாநிலங்களில் 17  கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக  இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். 

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க