BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
விளையாட்டு

இத்தாலிய பொது டென்னிஸ் போட்டி: முதல் சுற்றிலேயே வாவ்ரிங்கா தோல்வி

16/09/2020 07:58 PM

ரோம், 16 செப்டம்பர் (பெர்னாமா) -- இத்தாலி, ரோமில் நடைபெற்று வரும், இத்தாலிய பொது டென்னிஸ் போட்டியின் ஆண்களுக்கான முதல் சுற்றிலேயே, மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ஸ்டான் வாவ்ரிங்கா தோல்வி அடைந்திருக்கிறார். 

அதேவேளையில், மகளிர் பிரிவில், முன்னாள் அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியின் வெற்றியாளர் சுலோன் ஸ்டீபன்ஸ், இரண்டாம் சுற்றுக்கு தகுதிப் பெறத் தவறியிருக்கிறார். 

ஃபோரோ இத்தாலிகோ அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான முதல் சுற்றில் சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா, உபசரணை நாட்டைச் சேர்ந்த18 வயதுடைய லோரன் முசெட்டியை சந்தித்து விளையாடினார். 

24 நிமிடங்களிலேயே முதல் செட்டை 6-0 என்ற புள்ளிகளில் தம் வசப்படுத்திக் கொண்ட, லோரன் முசெட்டி இரண்டாம் சுற்றில், சற்று போராடி 7-6 என்ற புள்ளிகளில், ஸ்டான் வாவ்ரிங்காவை வீழ்த்தி இருக்கிறார். 

மகளிருக்கான பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றில், அமெரிக்காவின் சுலோன் ஸ்டீபன்ஸ்சை சந்தித்து விளையாடிய ஸ்பெயினின் கார்பின் முகுருசா 6-3, 6-3 என்ற நேரடி செட்களில் மிக எளிமையாக வெற்றிப் பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். 

அடுத்து நடைபெற்றவிருக்கும் ஆட்டத்தில், கார்பின், மற்றொரு அமெரிக்கரான கோகோ காஃப்வை சந்திக்கவிருக்கிறார். 

--பெர்னாமா