Wednesday, 23 Sep 2020
16/09/2020 01:04 PM

கோலாலம்பூர், 16 செப்டம்பர் (பெர்னாமா) -- 87-வது ஏ.டி.எம் (ATM) எனப்படும் மலேசிய ராணுவப் படைத் தின கொண்டாடத்தை முன்னிட்டு, அனைத்து ராணுவ வீரர்கள் உட்பட பணி ஓய்வுப் பெற்ற ராணுவ வீரர்களுக்கும் அதில் பணியாற்றிய அனைத்து உறுப்பினர்களுக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் ரியாத்துடின் அல்-முஸ்தாஃபா பில்லா ஷா தமது வாழ்த்தினை தெரிவித்தார்.     

ஏ.டி.எம்-இன் அனைத்து உறுப்பினர்களுக்கும், குறிப்பாக இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து கொவிட்-19 பெருந்தொற்றை துடைத்தொழிக்க தங்களின் நேரத்தைத் தியாகம் செய்து முன்னிலை பணியாளர்களாக பணியாற்றி, அரசாங்கத்திற்கு உதவிய அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.   

"நாம் நேசிக்கும் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் சேவை, பக்தி மற்றும் தியாக மனப்பான்மையைக் கொண்டு செயல்பட்ட அனைத்து வீரர்கள் மற்றும் பணி ஓய்வுப் பெற்ற ராணுவ வீரர்களுக்கும், ஏ.டி.எம்-இன் தலைவரான நான் என் மனதாரான நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

ஏ.டி.எம் தொடர்ந்து அனைத்துலக அரங்கில் மதிப்பிற்குரிய மற்றும் மரியாதைக்குரிய சக்தியாக இருக்கட்டும்," என்று இஸ்தானா நெகாராவின் முகநூல் கணக்கில் மாமன்னர் இவ்வாழ்த்தினைக் குறிப்பிட்டார். 

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 16-ஆம் தேதி ஏ.டி.எம் தினம் கொண்டாடப்படுகிறது.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க