உலகம்

சில வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு

15/09/2020 03:52 PM

இந்தியா, 15 செப்டம்பர் (பெர்னாமா) -- வெங்காய விலைகள் அதிகரித்துள்ளதால் அவற்றின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளதால் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தமிழ்நாடு

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் இருந்து வரும் சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது. அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. 

புதுடெல்லி

சீனாவுடன் ஏற்பட்டு வரும் எல்லைப் பிரச்சனை குறித்து இன்று இந்திய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அந்நாடு முழுவதும் கொவிட்-19 நோய் அதிகரித்து வரும் நிலையில் தொடுகை இடைவெளியை பின்பற்றி, இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ளது. 

தோக்கியோ

ஜப்பானிய ஆளும் கட்சித் தலைவராகவும், அந்நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் யொஷிஹிடெ சுகா தமது புதிய அமைச்சரவையை கூடிய விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. உடல்நலக் குறைவால், பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகப்போவதாக ஷின்சோ அபே அறிவித்ததைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் யொஷிஹிடெ சுகா ஆளும் கட்சிக்கு தலைமை ஏற்க தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பாரா மாநிலம்

பிரேசிலின், அமேசான் மழைக்காடுகளில் மீண்டும் தீ பிடிக்க தொடங்கியிருக்கிறது. நிலையற்ற வானிலை காரணமாக, உலகின் மிகப் பெரிய வனப்பகுதிகளான அமேசான் மழைக்காடுகளில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் தீ பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

-- பெர்னாமா