சிறிய முதலீட்டில் சொத்துடமை; தலைநகரில் இலவச விளக்கக் கூட்டம்

12/09/2020 09:41 PM

கோலாலம்பூர், 12 செப்டம்பர் (பெர்னாமா) -- சொத்துடமை என்றாலே பெரிய முதலீடு அவசியம் என்ற எண்ணத்தில் பெரும்பாலான இந்தியர்கள் உள்ளனர். 

இது முற்றிலும் தவறான எண்ணம் என்றும் இந்த முதலீட்டிற்குச் சிறிய தொகையே போதுமானது என்று கூறுகிறார் பல ஆண்டுகளாக சொத்துடமை துறையில் ஈடுபட்டு வரும் கோவிந் பாலா.

நாட்டில் சொத்துடமை துறையில் சீனர்களே  ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 

இவர்கள் கையாளும் அணுகுமுறைகள் மற்றும் நுட்பங்கள் குறித்து இந்தியர்கள் அறியாததே இத்துறையில் ஈடுபடும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணம் என்று GDS PROPERTIES நிறுவனத்தின் உரிமையாளருமான கோவிந் கூறினார்.

அதே வேளையில், இத்துறையில் ஈடுபடுவதற்கு மிகப் பெரிய முதலீடு தேவை என்ற அச்சமும் இருப்பதால் நம்மவர்கள் இத்துறையில் காலடி பதிப்பதற்கு தயங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, சொத்துடமை துறையில் இருக்கும் வாய்ப்புகள் குறித்து இந்தியர்கள் அறிந்து கொள்ள ஒரு விளக்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தலைநகர் ஜாலான் துன் சம்பந்தன் 3, பிரிக்பீல்ட்ஸ் எனும் முகவரியில் உள்ள அர்த்த ஞான மையத்தில் வரும் 14-09-2020 திங்கள்கிழமை இரவு 7.30 மணி தொடங்கி 9.30 மணி வரை இந்த் இலவச விளக்கக் கூட்டம் நடைபெறும்.

இந்நிகழ்ச்சி குறித்த மேல் விபரங்களுக்கு 0123025643 / 0122717776 என்ற எண்களோடு தொடர்பு கொள்ளலாம்.

-- பெர்னாமா