BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
பொது

லோரி ஓட்டுநரிடமிருந்து கையூட்டுப் பெற்ற போலீஸ் கைது

01/09/2020 07:35 PM

 ஜோகூர்பாரு, 1 செப்டம்பர் (பெர்னாமா) --  லோரி ஓட்டுநர் ஒருவரிடமிருந்து 100 ரிங்கிட்டை கையூட்டாக பெற்ற வழக்கு தொடர்பில், விசாரணைக்கு உதவும் பொருட்டு லான்ஸ் கோப்ரல் அங்கீகாரமுடைய போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சம்பந்தப்பட்ட அந்த லோரி ஓட்டுநர் போலீசாரிடம் வழங்கிய புகாரைத் தொடர்ந்து, SERI ALAM போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றிவரும் அந்த 
32 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக டத்தோ அயுப் கான் தெரிவிதந்தார்.

சம்பந்தப்பட்ட அவ்வாடவர் மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக, குற்றவியல் நடைமுறைச் சட்டம், செக்‌ஷன் 384-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

கடந்த திங்களன்று உலு திராமில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்திற்கு அருகே, ஜாலான் ஜோகூர் பாரு - கோத்தா திங்கி  சாலையில் நடத்தப்பட்ட சாலைத் தடுப்பு நடவடிக்கையின்போது, பணியில் இருந்த அப்போலீஸ்காரர் கையூட்டுப் பெற்றதாக நம்பப்படுகிறது.

இதனிடையே, GENG OTONG குற்றவியல் கும்பலுக்கு உதவி புரிந்த குற்றத்திற்காக, கடந்த வியாழக்கிழமை, KOTA TINGGI SESYEN நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய இரண்டு போலீஸ்காரர்களை தமது தரப்பு இன்னும் தேடி வருவதாக  ஆயுப் கான் கூறினார்.

இவ்விருவருக்கும் எதிரான கைது ஆணை வெளியிடப்பட்டும், இன்னும் அவர்கள் சரணடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

 - பெர்னாமா