உலகம்

கொவிட்-19 நோயினால் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்

14/08/2020 09:51 PM

சென்னை, 14 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கொவிட்19 பெருந்தொற்றுக்கு ஆளான பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தற்போது கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, எம்ஜிஎம் மருத்துவ மையம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

முன்னதாக, எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் சீராக இருப்பதுடன் முன்னேற்றம் காணப்படுவதாக அம்மருத்துவ மையம் தகவல் வெளியிட்டிருந்தது. 

எனினும், ஆகஸ்ட் 13-ஆம் தேதி இரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததாக அது அவ்வறிக்கையில் கூறியிருக்கிறது.

இந்நிலையில், அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவ நிபுணர்கள் குழுவின் அறிவுரையின் அடிப்படையில், சுவாச கருவி உதவியுடன் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக எம்ஜிஎம் மருத்துவ மையம் கூறியிருக்கிறது.

இந்திய சினிமாவில் ஈடுசெய்ய முடியாத இடத்தை பெற்றிருக்கும் பாலசுப்ரமணியம் பூரண குணமடைய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அவரது ரசிர்கள் தொடர்ந்து பிரார்த்திப்பதாக பதிவு செய்து வருகின்றனர். 

-- பெர்னாமா