அரசியல்

சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தல்: முஹமட் சைடி அசிஸ் தேசிய முன்னணி வேட்பாளராக தேர்வு

12/08/2020 06:57 PM

த்ரொலாக், 12 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பேரா, சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தஞ்சோங் மாலிம் அம்னோ கிளையின் துணைத் தலைவரான முஹமட் சைடி அசிஸ் தேசிய முன்னணி வேட்பாளராக தேர்வுச் செய்யப்பட்டிருக்கிறார். 

இதனை, பேரா மாநில தேசிய முன்னணி தலைவரும், சிலிம் இடைத்தேர்தல் இயக்குநருமான டத்தோ சாரானி முஹமட் இன்று, புதன்கிழமை அறிவித்திருக்கிறார். 

இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, முன்னதாக கட்சியிலிருந்து ஒன்பது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், தேசிய முன்னணியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு முஹமட் சைடி அசிஸ் ஒரு சிறந்த தேர்வாக இருப்பதாக, டத்தோ சாரானி குறிப்பிட்டார். 

இந்நிலையில், 43 வயதுடைய சைடி அசிஸ், தம் மீது நம்பிக்கைக் கொண்டு, தேசிய முன்னணியின் வேட்பாளராக நியமனம் செய்ததற்கு நன்றியைத் தெரிவித்து கொண்டார். 

கடந்த ஜூலை 15-ஆம் தேதி, 59 வயதான SLIM சட்டமன்ற உறுப்பினர், டத்தோ முஹமட் குசைரி அப்துல் தலிப் காலமானதைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

வரும் ஆகஸட் 15-ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தினமாகவும், ஆகஸ்ட் 29-ஆம் தேதி வாக்களிப்பு தினமாகவும், தேர்தல் பொறுப்பாண்மைக்குழு, எஸ்.பி.ஆர் நிர்ணயித்திருந்தது.

-- பெர்னாமா