பொது

கோலா சங்லாங்கில் மேலும் ஒரு பள்ளி மூடப்படுகிறது

09/08/2020 09:08 PM

கங்கார், 9 ஜூலை (பெர்னாமா) -- நேற்று, சனிக்கிழமை இரவு முதல், இலக்கிடப்பட்ட கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, TEMCO அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கோலா சங்லாங்கில் மேலும் ஒரு பள்ளி, இரண்டு வாரங்களுக்கு மூட பெர்லிஸ் மாநில கல்விப் பிரிவு உத்தரவிட்டிருக்கிறது.

தேசிய வகை சின் ஹுன் சீனப்பள்ளி மூன்றாவது மூடப்பட்ட பள்ளியாகும் என்று பெர்லிஸ் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அஸ்லான் மான் தெரிவித்தார்.

''876 மாணவர்களையும் 112 ஆசிரியகளையும் உள்ளடக்கிய இம்மூன்றுப் பள்ளிகளும் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு மூடப்படவிருக்கிறது,'' என்று அவர் தமது முகநூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு முன்னர், கோலா சங்லாங் தேசிய பள்ளியையும், கோலா சங்லாங் தேசிய இடைநிலைப்பள்ளியையும் மூடுமாறு மாநில கல்விப்பிரிவு உத்தரவிட்டதாக நேற்று, சனிக்கிழமை பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.

இக்காலக்கட்டத்தில், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவதாக அஸ்லான் கூறினார்.

இதனிடையே, TEMCO-விற்கு உட்படுத்தப்பட்ட கம்போங் தானா திம்புல் மற்றும் கம்போங் கோலா சங்லாங் ஆகிய கிராமங்களில் வசிக்கும் சைய்ட் அல்வி தேசிய இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 15 மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி எஸ்.டி.பி.எம். சோதனை எழுதவிருக்கின்றனர்.

இவர்கள் தற்காலிகமாக, அப்பள்ளியின் தங்கும் விடுதியிலும் அருகில் இருக்கும் இதர இடங்களிலும் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 நோய்ப் பரவுவதைக் கட்டுப்படுத்த, நேற்று இரவு 10 மணி முதல், இரண்டு கிராமங்களில் 28 நாட்களுக்கு பெர்லிஸ் அரசாங்கம் TEMCO அமல்படுத்தி இருக்கிறது.

-- பெர்னாமா