பொது

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறிய 178 பேர் கைது

09/08/2020 03:53 PM

கோலாலம்பூர், 09 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறிய குற்றத்திற்காக, அரச மலேசிய போலீஸ் படை சனிக்கிழமை 178 பேரை கைது செய்தது. 

அதில் 8 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன் ஒருவர் ஜாமினில் விடுதலைச் செய்யப்பட்டிருக்கிறார். எஞ்சிய 169 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் செயல்பாட்டு தர விதிமுறை பின்பற்றப்படுவதை உறுதிச் செய்ய சனிக்கிழமை 62,126 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார். 

அதேவேளையில், சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க போலீஸ் படை நாடு முழுவதிலும் 65 OP BENTENG சாலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் 26,794 வாகனங்கள் சோதனையிடப்பட்டதோடு, குடிநுழைவு குற்றத்திற்காக வெளிநாட்டு ஆடவர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டதாக இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். 

இதனிடையே, கடந்த ஜூலை 24ஆம் தேதி தொடங்கி நேற்று வரையில், நாட்டின் அனைத்துலக நுழைவாயில் வாயிலாக 8,011 பேர் நாட்டிற்குள் நுழைந்திருப்பதாக அவர் கூறினார். அவர்களில், 20 பேருக்கு கொவிட்-19 நோய்க் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். 

எஞ்சியவகள் அனைவரும், தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்காக, கோலாலம்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, ஜோகூர், சரவா, கிளந்தான், பேரா மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் உள்ள 31 தங்கும் விடுதிகளிலும் ஐந்து பொது பயிற்சிக் கழகங்கத்திலும் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். 

--பெர்னாமா