பொது

பெட்ரோல் விலை 5 சென் இறக்கம் கண்டுள்ளது

07/08/2020 07:18 PM

கோலாலம்பூர், 07 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நாளை சனிக்கிழமை, ஆகஸ்ட் எட்டாம் ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரையில், ரோன் 97 மற்றும் ரோன் 95 ரகப் பெட்ரோல், மற்றும் டீசல் விலை இறக்கம் கண்டிருக்கிறது. 

இந்நிலையில், ரோன் 97 ரகப் பெட்ரோல், ஒரு லிட்டர், ஐந்து சென் இறக்கம் கண்டு ஒரு ரிங்கிட் 93 சென்னுக்கு விற்கப்படும். 

ரோன் 95 ரக பெட்ரோல், ஒரு லிட்டர், ஐந்து சென் இறக்கம் கண்டு ஒரு ரிங்கிட் 63 சென்னுக்கு விற்கப்படும். 

டீசல், ஒரு லிட்டர், நான்கு சென் இறக்கம் கண்டு ஒரு ரிங்கிட், 79 சென்னுக்கு விற்கப்படும். 

--பெர்னாமா