உலகம்

கொவிட் பெருந்தொற்றை ஒழிக்க முடியாது -  தொற்றுநோய் நிபுணர் அதிர்ச்சி தகவல்

06/08/2020 09:45 PM

வாஷிங்டன், 06 ஆகஸ்ட் (பெர்னாமா) --கொவிட் பெருந்தொற்றை ஒழிக்க உலகத்தால் முடியாது. தடுப்பூசியானது தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவர மட்டுமே உதவக்கூடும்.

மாறாக இந்தத் தொற்றை நம்மால் ஒழிக்க முடியாது. ஏனென்றால் இது மிகவும் பயங்கரமாக பரவக்கூடிய கிருமியாகும். அதனால் ஒழிப்பது சாத்தியமில்லை என்று அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பவுசி தெரிவித்தார்.

ஆனால் ஒரு நல்ல தடுப்பூசி மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நாம் இத்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று தாம் கருதுவதாகவும் அவர் கூறினார்.

- பெர்னாமா