Thursday, 06 Aug 2020
அரசியல்
01/08/2020 07:41 PM

 கோலாலம்பூர், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கெஅடிலான் கட்சிக்கு ஒரு கோடி ரிங்கிட் வழங்க வேண்டும் என்று அக்கட்சி கூறுவதை, தாம் பொருட்படுத்தப்போவதில்லை என்று அக்கட்சியின் முன்னாள் துணை தலைவரான டத்தோ ஶ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறியிருக்கிறார்.  

இது குறித்து தாம் அச்சம் கொள்ளப்போவதில்லை என்று கூறிய முஹமட் அஸ்மின், பி.கே.ஆர் கூறுவது நியாயமற்ற ஒன்று என்றும் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

''எதற்காக நான் பி.கே.ஆர்-க்கு ஒரு கோடி ரிங்கிட் செலுத்த வேண்டும்? எனக்கு பணம் இருந்தாலும், நான் அதை மக்களுக்குக் கொடுப்பேன். பி.கே.ஆர் போன்ற செயல் இழந்த கட்சிகளுக்கு நான் பணம் கொடுக்கமாட்டேன்.  பி.கே.ஆர் பற்றி பேசுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. ஏனெனில், அக்கட்சி நியாயமற்ற ஒன்றாக இருக்கிறது'', என்றார் அவர். 

அக்கட்சியில் இருந்து வெளியேறிய 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பணம் கோருவதற்கு அக்கட்சி தலைமையகம் கடிதம் ஒன்றை வெளியிடும் என்று அதன் பொருளாலர் லீ சியான் சுங் தெரிவித்திருப்பதற்கு அஸ்மின் இவ்வாறு கூறினார்.  

 - பெர்னாமா 
 

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க