உலகம்

கொவிட் அதிகரிப்பால் ஹாங் காங்கில் சட்டமன்றத் தேர்தல் ஒத்தி வைப்பு

01/08/2020 03:41 PM

ஹாங் காங், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) --ஹாங் காங்கில் கொவிட்-19 நோய் பரவல் அதிகரித்து வருவதால் பின்னர் அறிவிக்கப்படும் நாள் வரை அந்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

மக்களின் சுகாதாரத்திற்கும் பாதுகாக்கப்பிற்கும் முக்கியத்துவம் கொடுப்படுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அதன் தலைமை நிர்வாகி கெரி லாம் (CARRIE LAM) தெரிவித்தார்.

கெரி லாமின் இந்த முடிவு அந்நகரின் ஜனநாயக ஆதரவாலர்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

செப்டம்பர் 6-ஆம் தேதி  நடைபெறவிருந்த இத்தேர்தலை ஒத்திவைக்க மத்திய அரசாங்கத்தின் ஆதரவு கிடைத்திருப்பதாகவும் லாம் கூறியிருக்கிறார்.

ஹாங்காங்கில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான தேதி குறித்து முடிவு செய்வதில் கொவிட்-19 நோய்ப்பரவலைக் கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதாக சீனா தெரிவித்திருக்கிறது.


இருப்பினும், ஹாங்காங்-கில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 நோயால், ஹாங்காங்கில் இதுவரை 3,273 பேர் பாதிக்கப்பட்டிருப்பதுடன் 27 பலியாகியியுள்ளனர்.

- பெர்னாமா