Thursday, 06 Aug 2020
விளையாட்டு
27/07/2020 05:48 PM

இங்கிலாந்து, 27 ஜூலை (பெர்னாமா) --2019/2020 பருவத்திற்கான இங்லீஷ் பிரிமியர் லீக் கிண்ண ஆட்டங்கள் இன்று அதிகாலையுடன் நிறைவடைந்தன. 

இதில், லிவர்பூல் லீக் பட்டத்தைக் கைப்பற்றி இருக்கும் வேளையில், மென்செஸ்டர் யுனைடெட்  (MANCHESTER UNITED) மற்றும் செல்சி (CHELSEA)  முறையே மூன்றாவது நான்காவது இடங்களைப் பிடிக்கும் போட்டியில் வெற்றி பெற்றன. 

இதன்வழி, அவ்வணிகள் நேரடியாக ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ண போட்டிக்குத் தகுதி பெற்று அதன் ரசிகர்களை உச்சிக் குளிர வைத்துள்ளன.

லிவர்பூலும் மென்செஸ்டர் சிட்டியும் ஏற்கனவே அதன் இடங்களை ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ண போட்டிக்கு உறுதி செய்த வேளையில், மீதமுள்ள இரண்டு இடங்களைப் பிடிப்பதில் கடும் போட்டியை எதிர்நோக்கின. 


செல்சி 2-0 என்ற கோல்களில், WOLVES--சை தோற்கடித்த நிலையில், மென்செஸ்டர் யுனைடெட்டும் அதற்கு கடும் சவாலை ஏற்படுத்திய லெய்செஸ்டர் சிட்டியை (LEICHESTER CITY) 2-0 என்ற கோல்களில் வீழ்த்தியது. 

இவ்விரண்டு அணிகளும் சரிசமாக  66 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், அதிக கோல்களை அடித்ததால் மென்செஸ்டருக்கு மூன்றாவது இடம் உறுதியானது. 

அதேவேளையில், தகுதி கீழிறக்கும் காணும் நிலையில் இருந்த  ASTON VILLA--வின் தலை தப்பித்து தற்போது, BOURNMOUTH, NORWICH CITY மற்றும் WARDFORD ஆகிய அணிகள் கீழிறக்கம் கண்டு இரண்டாம் டிவிசனுக்கு தள்ளப்பட்டுள்ளன. 

- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க