Thursday, 06 Aug 2020
சிறப்புச் செய்தி
25/07/2020 08:32 PM

கோலாலம்பூர், 25 ஜூலை (பெர்னாமா) -- எஸ்.பி.எம் தேர்வு எழுதும் இந்திய மாணவர்களுக்கு அரசு சார்பற்ற நிறுவனமான மலேசிய அறிவுசார் வளர்ச்சி இயக்கம் இயங்கலை வாயிலாக இலவச பயிலரங்கை நடத்த முன்வந்துள்ளது. 

மாணவர்களின் இலக்கையும் எதிர்காலத்தையும் நிர்ணயிகக்கூடிய முக்கிய தேர்வாக எஸ்.பி.எம் விளங்குகிறது. 

ஆயினும், கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டதோடு கற்றல் கற்பித்தலும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. 

மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், முன்பு போல் மாணவர்கள் வேகத்தோடும் விவேகத்தோடும் தங்கள் கல்வியைத் தொடர்வார்களா என்றும் தேர்வுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் தங்களைத் தயார்படுத்திக்கொள்வார்களா என்ற கேள்வியும் எழவே செய்கிறது. 

கொவிட்-19 நோய் தொற்று நாட்டில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், கல்வி துறையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 2020ஆம் ஆண்டு பெரும் சவாலாக அமைந்திருக்கின்றது. 

இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் மாணவர்கள் தங்களை சிறந்த வழியில் தயார்ப்படுத்திக் கொள்ள இந்த பயிலரங்கம் வகை செய்யும் என்று ஆசிரியர் துரைவேலு ஊசலப்பன் தெரிவித்திருக்கிறார்.

இயங்கலை வழி பாடங்களை கற்று வந்தாலும், முறையான இணைய வசதி இல்லாத காரணத்தால் பல மாணவர்கள் அதில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. 

மேலும், வேலைப் பளுவின் காரணத்தால் பெற்றோர்களும் பிள்ளைகள் மீது முழுமையான கவனத்தைச் செலுத்த முடியாமல் போனதால், அவர்களின் பாடங்கள் தடைப்பட்டு நிற்பதாக அவர் கூறுகிறார். 

ஆதலால், தேர்வுக்குத் தயாராகும் ஒரு சிறந்த தளத்தை, தாங்கள் மாணவர்களுக்கு அடையாளம் கண்டு, இணையம் வாயிலாக போதிக்கவிருப்பதாகவும் மலாய் மொழி ஆசிரியனுமான அவர் தெரிவித்தார். 

2013-ஆம் ஆண்டு தொடங்கி இந்திய மாணவர்களுக்காக பல வழிகாட்டி நிகழ்ச்சிகளை 
மேற்கொண்டு வரும் இவ்வியக்கம், விவேகமான முறையில் மாணவர்களைத் தேர்வுக்கு தயார்ப்படுத்துவது அவசியம் என்றும் கூறுகிறது. 

குறிப்பாக, விவேக கற்றல் முறை, மீள்பார்வை செய்தல், பயிற்சிகளை மேற்கொள்ளும் அணுகுமுறை போன்றவை இந்த இயங்கலை பயிலரங்கம் வழி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.

இலவசாமாக நடத்தப்படும் இந்த தேர்வு வழிகாட்டி கருத்தரங்ளை தேர்வெழுதும் மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் துரைவேலு கேட்டுக்கொண்டார். 

கூடுதல் தகவல்களுக்கும் முன்பதிவுக்கும்; மாணவர்களும் பெற்றோர்களும் 016-9184029 / 017-2048187 / 03-80818187 ஆகிய தொலைப்பேசி எண்களுடன் தொடர்புகொள்ளலாம். 

-- பெர்னாமா 

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க