Thursday, 06 Aug 2020
விளையாட்டு
25/07/2020 04:48 PM

புக்கிட் ஜாலில், 25 ஜூலை (பெர்னாமா) -- 2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் அதிக இடங்களை பிடிக்கும் நோக்கத்தில் தனது அணிகளின் உண்மையான செயல்திறன்களை திரும்ப கொண்டு வருவதற்கு சவாலை எதிர்நோக்குவதாக தேசிய மாற்றுத்திறனாளி விளையாட்டாளர்களின் தலைமை பயிற்சியாளர் ஆர்.ஜெகநாதன் தெரிவித்திருக்கிறார். 

தேசிய மாற்றுத்திறனாளி விளையாட்டாளர்களின் செயல்திறனையும் வேகத்தையும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு குறைந்தது 4 மாதங்கள் தேவைப்படும் என்று அவர் கூறுகிறார்.

நாட்டில் ஏற்பட்ட கொவிட்-19 நோயின் தாக்கத்தை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அணிகளின் திறன்களை மீண்டும் கொண்டு வர முடியும் என்று தாம் நம்புவதாக ஜெகநாதன் தெரிவித்தார். 

"நான் தற்போது அவர்களுடன் தங்கியிருக்கிறேன். ஒரு பயிற்றுநராக அவர்களது பலவீனங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கற்றுக் கொள்வதற்கு நேரம் அதிகம் தேவைப்படுகிறது. 10 நிமிடங்களின் மறந்துவிடுகின்றனர். இதற்கிடையில் ஐ.எஸ்.என் எனக்கு உதவி செய்கின்றனர். ரோஹானா உட்பட உளவியல், உடலியல், உயிர் இயக்கவியல், விளையாட்டு அறிவியல் சார்ந்தவர்களும் உதவியாக இருக்கிறார்கள். தற்போது, நாங்கள் ஒரு குழுவான இணைந்து செயல்படுகிறோம்", என்று அவர் கூறினார். 

இதனிடையே, விளையாட்டாளர்களின் செயல்திறனை நிர்ணயிக்க தேர்வு மற்றும் உருவகப்படுத்தும் போட்டி அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்று ஜெகநாதன் விளக்கமளித்தார். 

அண்மையில் புக்கிட் ஜாலில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிக்குப் பின்னர், பெர்னாமா தொலைக்காட்சியிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதுவரை முஹமட் ரிட்சுவான் முஹமட் புஸி, முஹமட் சியாட் சொல்கெஃப்லி, அப்துல் லதிஃப் ரொம்லி மற்றும் ஜோநாதன் வோங் கார் கீ ஆகியோர் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க