Thursday, 06 Aug 2020
சிறப்புச் செய்தி
24/07/2020 08:15 PM

கோலாலம்பூர் ஜூலை 24 (பெர்னாமா) -- தன்னலம் கருதாமல் தியாக உணர்வுடன் கடமை ஆற்றுபவர்கள் மிகவும் போற்றப்பட வேண்டியவர்கள் என்று மலேசிய முன்னேற்ற கட்சியான (ஏம்.ஏ.பி) தேசியத் தலைவர் செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறியிருக்கின்றார். 

நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் இருந்தபோது, வசதியற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பண்டங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீடு வீடாகச் சென்று வழங்கிய கட்சி உறுப்பினர்களையும் தன்னார்வலர்களையும் சேவையாளர்களையும் முன்னாள் அமைச்சருமான வேதமூர்த்தி சிறப்பித்தார். 

கடந்த மார்ச் 18-ஆம் தேதி  முதல் வீட்டில் முடங்கிய ஏழை மக்கள், குறிப்பாக அன்றாட சம்பளம் பெறும் தரப்பினர், குறைந்த வருமானம் பெறுபவர்கள் என்று ஏராளமான இந்தியக் குடும்பங்கள் தேசிய அளவில் பாதிக்கப்பட்டன.

அப்படிப்பட்ட தரப்பினருக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் வேதமூர்த்தியின் வழிகாட்டலில் உணவுப் பொருள் வழங்கும் நடவடிக்கை முடிக்கிவிடப்பட்டது.

தங்களின் உயிரையும் சுகாதார அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் மாநிலந்தோறும் பயணம் மேற்கொண்டு ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள் வழங்கியவர்களை பாராட்டும் வகையிலும் சேவை மனப்பான்மை கொண்ட அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், கோலாலம்பூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி  கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டது.

--பெர்னாமா 

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க