உலகம்

சில வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு

05/07/2020 05:26 PM

இங்கிலாந்து 

கொவிட்-19 நோய் பரவலைக் கட்டுபடுத்துவதற்காக, இங்கிலாந்தில் மூடப்பட்டிருந்த உணவகங்களும், கேளிக்கை மையங்களும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் செயல்படத் தொடங்கி இருக்கின்றன. 

தொடுகை இடைவெளி உட்பட நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு தரவிதிமுறைக்கு உட்பட்டு அருங்காட்சியகங்களும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருக்கின்றன. 


மெக்சிக்கோ

மெக்சிக்கோவில் அதிகரித்து வரும் கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்த, அதன் தலைநகர் மெக்சிக்கோ சிட்டியில் ஒரு வாரத்திற்குப் பின்னர் மீண்டும் கடுமையாக்கப்பட்ட பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 

இன்னும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கவிருக்கும், அப்பொது முடக்கத்திற்குப் பின்னர், புதிய மற்றும் கடுமையான விதிமுறைக்கு உட்பட்ட தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 


அமெரிக்கா 

கொவிட்-19 பரவல் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில், அந்நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில், கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது. 

இந்த கொண்டாடத்தில், கொவிட்-19 தீவிரமாக பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், ஆயிரக்கணக்கான அக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கொவிட்19 பெருந்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் போராடிய இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் முன்னிலை பணியாளர்களுக்கு, அந்நாட்டின் காற்பந்து கிளப்புகள் தங்களின் ஆட்டங்களைத் தொடங்குவதற்கு முன்னர் கைத்தட்டி நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். 

தேசிய சுகாதார சேவையின் 72-ஆம் ஆண்டு நிறைவாண்டை முன்னிட்டு, மன்செஸ்டர் யுனைடட், செல்சி, ஆர்சனல் மற்றும் வோல்வ்ஸ் போன்ற முன்னணி கிளப்புகள் இந்த சமர்ப்பணத்தை அவர்களுக்காக பதிவு செய்தனர். 


ரஷ்யா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை 2036-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்க அனுமதியளித்திருக்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மனு ஒன்றை தாக்கல் செய்ய, நூற்றுக்கணக்கான மக்கள் மாஸ்கோவில் திரண்டனர். 

2024 ஆம் ஆண்டு நிறைவடையக் கூடிய புடினின் பதவிக் காலத்தை, இன்னும் 12 ஆண்டுகளுக்கு நீட்டிப்படுவது, சட்டவிரோதமான செயலாக அவர்கள் கருதுகின்றனர். 

--பெர்னாமா