BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
உலகம்

சில வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு

04/07/2020 08:00 PM

உத்திர பிரதேசம்,4 ஜூலை (பெர்னாமா) --  இந்தியாவின், உத்திர பிரதேச மாநிலத்தின் கன்பூர் பகுதியில், தங்களைப் பிடிக்க வந்த போலீஸ்சாரில் எண்மரை, குற்றவாளிகள் சரமாரியாக சுட்டுக் கொன்றிருக்கின்றனர். இச்சம்பவத்தில், மேலும், ஐந்து போலீஸ் அதிகாரிகள் காயமுற்றனர். 

ஜப்பான்

ஜப்பானின் தெற்கு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனத்த மழையினால், அதன் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதுடன் மண் சரிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. இச்சம்பவங்களில் குறைந்தது இருவர் உயிரிழந்திருப்பதோடு, 12-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கின்றனர். குமாமோட்டோ, காகோஷிமா ஆகிய பகுதிகளில் இருக்கும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். 

துருக்கி

துருக்கி, சாகர்யா மாகாணத்தில் இருக்கும் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடிப்பு சம்வத்தில் இருவர் பலியாகி இருப்பதோடு 73 பேர் காயம் அடைந்திருக்கின்றனர். இச்சம்பவத்தின் போது, 150 தொழிலாளிகள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. 

சுவிட்சர்லாந்து

சீனா, வுஹான் நகரில் பரவத்தொடங்கிய கொவிட்-19 நோய் தொடர்பான முதல் கட்ட எச்சரிக்கை, குற்றம் சாட்டுவது போல், அந்நாட்டின் அரசாங்கம் வெளியிடவில்லை. மாறாக, சீனாவில் இருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி அலுவலகம் அவ்வெச்சரிக்கையை வெளியிட்டதாக அதன் தலைவர்  டெட்ரோஸ் அதானோம் கெப்ரைசஸ் தெரிவித்திருக்கிறார். 

அமெரிக்கா

அமெரிக்காவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக, 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொவிட்-19 நோய்க்கு ஆளாகி இருக்கின்றனர். அப்பெருந்தொற்றுக்கு இதுவரை மொத்தம், 28 லட்சத்து 90,588 பேர் பாதிக்கப்பட்டிருப்பதுடன் 1 லட்சத்து 32,101 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 

கென்யா

கொவிட்19 நோயின் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனையைக் கையாளுவதற்காக கென்யாவில், சிலர் விலங்குகளைச் சட்டவிரோத வேட்டையாடுகின்றனர். அங்குள்ள வனவிலங்குகளைக் காப்பாற்றுவதற்கு, NAIROBI'S SHELDRICK WILDLIFE TRUST என்ற அமைப்பு போராடி வருகிறது. 

-- பெர்னாமா