அரசியல்

இளம் வேட்பாளர் என்பது பலவீனமல்ல; பயனுள்ள அனுபவம்

02/07/2020 01:37 PM

சினி, 2 ஜூலை (பெர்னாமா) -- இளைஞர் அமைப்புகளில் இருந்து கொண்டு சினி தொகுதி மக்களுக்கு உதவியது  ஒரு பயனுள்ள அனுபவமாக உள்ளதாக சினி சட்டமன்றத் தொகுதி தேசிய முன்னணி வேட்பாளர் தெரிவித்தார்.

இதன் மூலம் சினி சட்டமன்றத் தொகுதியிலுள்ள முன்னாள், இந்நாள் தலைமுறையினரின் நலனுக்கிடையிலான சமநிலைப் போக்கு முக்கிய அம்சமாக இருந்துள்ளதாகவும் முகமட் ஷாரிம் முகமட் ஸைன் குறிப்பிட்டார்.

சினி இடைத்தேர்தலில் போட்டியிடும் தாம் இளம் வேட்பாளராக இருந்தாலும் கூட அதை ஒரு பலவீனமாகக் கருதவில்லை.

மாறாக அது ஒரு சவாலாகக் கருதி அப்பகுதியிலுள்ள மக்களுக்கு உதவுவதற்கு நல்ல வாய்ப்பாக இது அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

இதனிடையே, சினி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், தேசிய முன்னணிவேட்பாளர் முகமட் ஷாரிம் களமிறங்க, அவரை எதிர்த்து  தெங்கு சைனுல் ஹிஷாம் தெங்கு ஹுசின் மற்றும் முகமட் ஷுக்ரி முகமட் ரம்லி இருவரும் போட்டியிவிருக்கின்றனர்.

- பெர்னாமா