Monday, 06 Jul 2020
சிறப்புச் செய்தி
30/06/2020 08:43 PM

கோலாலம்பூர், 30 ஜூன் (பெர்னாமா) -- மீட்பு நிலை நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவான பிகேபிபி காலக்கட்டத்தில் பெரும்பாலான துறைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரு சில துறைகளுக்கான அனுமதி வழங்கப்படாமல் இருக்கின்றது. 

குறிப்பாக, உணவு, சுவைநீர் கேளிக்கை சார்ந்த துறைகளுக்கு இன்னும் அனுமதி இல்லாததால் அதன் உரிமையாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். 

எனவே, இப்பொருளாதார சுமையை குறைக்கும் நோக்கத்தில், செயல்பாட்டு தர விதிமுறையான எஸ்.ஓ.பியைப் பின்பற்றி, உணவு, சுவைநீர் கேளிக்கை மையங்கள் மீண்டும் திறக்கப்படுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று ப்ரோ டீம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

மார்ச் 18-ஆம் தேதி நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, உணவு, சுவைநீர் கேளிக்கை மையங்களின் உரிமையாளர்கள் மட்டுமல்லாது, அதன் ஊழியர்கள் மற்றும் மேடை கலைஞர்களுக்கும் பாதிப்படைந்திருப்பதாக ப்ரோ டீம்  சங்கத்தின் தலைவர் டத்தோ சிவகுமரன் பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். 

அதேவேளையில், அச்சங்கத்தில் பதிவு பெற்றிருக்கும் 500-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் இதேபோன்ற சிக்கலை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற எதிர்ப்பார்ப்பில், தாங்கள் இந்தக் கோரிக்கையை முன் வைப்பதாகவும் அவர் கூறினார். 

இதர துறைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் எஸ்.ஓ.பியை போன்று இத்துறைக்கும் குறிப்பிட்ட SOPயை வழங்கினால், சிறப்பாக வழிநடத்த முடியும் என்று ப்ரோ டீம்  சங்கத்தின் செயலாளர் ரோய் செல்வராஜ் நம்பிக்கை தெரிவித்தார். 

இந்த துறை மூடப்பட்டதில் குறிப்பாக தினசரி வருமானம் ஈட்டும் இசைக் கலைஞர் மேடைக் கலைஞர்கள் பலர் தங்களது வருமானத்தை இழந்துள்ளனர். 

எனவே, இசை மற்றும் மேடைக் கலைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இந்த துறையை விரைவில் அரசாங்கம் செயல்ப்பட அனுமதி வழங்கினால், பலருக்கும் நன்மை அளிக்கும் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

--பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க