பொது

MyCity வரம்பற்ற அட்டைகளுக்கு கூடுதல் கழிவு

30/06/2020 08:31 PM

கோலாலம்பூர், 30 ஜூன் (பெர்னாமா) -- MyCity வரம்பற்ற அட்டைக்கான அனைத்து ரயில் மற்றும் BRT RAPID KL சேவைகளில் கூடுதல் கழிவு வழங்கப்படும் என்று மலேசிய பிராசாரான நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்தக் கழிவு திட்டம் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என்று பிராசாரான நடவடிக்கை குழுத் தலைமை அதிகாரி முகமட் நிசாம் அலியாஸ் தெரிவித்திருக்கிறார். 

இதற்கு முன்னர் ஒரு நாளுக்கு 20 ரிங்கிட்டாகவும் 3 நாட்களுக்கு 35 ரிங்கிட்டாவும் இருந்த இந்த MyCity அட்டையை தற்போது ஒரு நாளுக்கு 5 ரிங்கிட்டிற்கும் 3 நாட்களுக்கு 15 ரிங்கிட்டிற்கும் வாங்கலாம் என்று இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையின் மூலம் முகமட் நிசாம் தெரிவித்தார். 

இந்த கூடுதல் கழிவு அட்டையில் 'Touch ‘N Go' அட்டைக்கான 5 ரிங்கிட் உட்பட குறைந்தபட்ச தொகையான 5 ரிங்கிட்டும் இதில் உட்படுத்தப்படவில்லை. 

கடந்த மார்ச் மாதம் கொவிட்-19 நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட உள்ளூர் சுற்றுலா துறையை இந்த MyCity அட்டை திட்டத்தால் மீட்க முடியும் என்று முகமட் நிசாம்  நம்பிக்கை தெரிவித்தார். 

ஜூலை முதலாம் தேதி 2020 தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி 2020 வரை இந்த MyCity கழிவு அட்டையின் மூலம் பயன்பெறலாம் என்றும் மேலும் அனைத்து 122 LRT, MRT, MONERAL dan BRT ரயில் நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இது குறித்து மேல் விவரங்களை ரயில் மற்றும் BRT நிலையங்களில் RAPID KL பணிப்புரியும் ஊழியர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 

அதோடு, RAPID KL சமூக வலைத்தளம் அல்லது www.myrapid.com.my அகப்பக்கத்தை வலம் வரலாம். 

--பெர்னாமா