Thursday, 02 Jul 2020
உலகம்
30/06/2020 03:43 PM

புது டில்லி, 30 ஜூன் (பெர்னாமா) --கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்தியத் தலைநகர், புது டில்லியில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்படவுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் குறைந்தது 20 ஆயிரம் கொவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இதனால், அந்நாட்டில் சில மாநிலங்களில் மீண்டும் முழு அல்லது குறிப்பிட்ட பகுதியில் பொது முடக்கம் செய்யவும் பரீசீலனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக புது டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவைப் பெற்று, அதனை தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்களுக்கு வழங்கும் முறைதான் பிளாஸ்மா சிகிச்சை முறையாகும். 

அதனை, சிகிச்சைப் பெறுபவர்களுக்கு வழங்கும்போது அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து குணமடைய வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

எனவே, கொவிட்-19 புதிய நோயாளிகளுக்கு, இந்நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் பிளஸ்மாவை தானம் செய்யுமாறும் அர்விந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்த ஒவ்வொருவரும் பிளாஸ்ம்ச்ச் தானம் செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.

இது அந்நாட்டில் தொடங்கப்படும் முதல் பிளஸ்மா வங்கியாகும். 

இந்தியாவில் சுமார் ஐந்து லட்சத்து 55 ஆயிரம் கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

புது டில்லியில் மட்டும் இதுவரை 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பெருந்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

அதோடு, உலகளவில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷியாவிற்கு அடுத்து இந்தியாவில் மிக அதிகமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 

அந்நாட்டில், கொவிட்-19 காரணமாக 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருக்கின்றனர். 

--பெர்னாமா
 

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க