Thursday, 02 Jul 2020
விளையாட்டு
29/06/2020 04:28 PM

லண்டன், 29 ஜூன் (பெர்னாமா) --இங்கிலாந்து எஃப்ஏ (FA) கிண்ண காற்பந்து போட்டியில் மன்செஸ்டர்  சிட்டி 2-0 என்ற கோல்களில் நியூகாஸ்டலைத் தோற்கடித்து வெற்றிகரமாக அறையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறது. 

சில தினங்களுக்கு முன்பு இங்லீஷ் பிரிமியர் லீக் கிண்ணத்தைப் பறிகொடுத்த சிட்டி, அடுத்து FA கிண்ண வெல்லும் இலக்கை நோக்கி பயணிக்கிறது. 

முதல் பாதி ஆட்டத்தில் கெவின் டி ப்ரூய்ன் மூலம் ஒரு கோலும் இரண்டாம் பாதி ஆட்டத்தில், ரஹீம் ஸ்டெர்லிங் வழி மற்றுமொரு கோலையும் அடித்து மன்செஸ்டர் சிட்டி வெற்றிப் பெற்றிருக்கிறது. 

சிட்டியின் வெற்றியை தடுத்து நிறுத்த நியூகாஸ்டல் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதன் தற்காப்பு பகுதி பலவீனமானதில், கோல்களின்றி ஏமாற்றத்துடன் ஆட்டத்தை முடித்துக் கொண்டது. 

இதனிடையே, எஃப்ஏ (FA) கிண்ண மற்றுமொரு ஆட்டத்தில், செல்சி 1-0 என்ற கோலில், லெய்செஸ்டர் சிட்டியைத் தோற்கடித்து அறையிறுதிக்கு தேர்வாகி உள்ளது. 

ஒரு புள்ளி வித்தியாசத்தில், இங்லீஷ் பிரிமியர் லீக் கிண்ண புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் செல்சி, லெய்செஸ்டர் சிட்டியைக்கு கடும் நெருக்குதலை அளித்து வருகிறது 

இரண்டாம் பாதி ஆட்டத்தில், 63ஆவது நிமிடத்தில் அடிக்கப்பட்ட ஒரே கோல் செல்சியின் வெற்றியை உறுதி செய்துள்ளது.

-பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க