Thursday, 02 Jul 2020
அரசியல்
27/06/2020 01:45 PM

பகாங், 27 ஜூன் (பெர்னாமா) -- சினி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் தலைமைத்துவத்தின் கீழ் செயல்படும் பெரிக்காத்தான் நெஷனல் தலைவர்களின் கூட்டமைப்புக்கு ஒரு திருப்புமுனையாக அமையும்.   

சினி இடைத்தேர்தல் பிரச்சாரங்களின் போது வழங்கப்படுகின்ற ஒத்துழைப்பு, பெரிக்காத்தான் நெஷனல்15-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு வழங்கப்படவிருக்கும் ஒருமித்த ஆதரவைப் புலப்படுத்துவதாக அம்னோவின் தலைமை தொடர்பு அதிகாரி ஷாரில் ஹம்டான் தெரிவித்தார்.

"டான் ஸ்ரீ முகிடின் தலைமையிலான அரசாங்கத்தைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அம்னோ மற்றும் பாஸ் போன்ற கட்சிகளின் கூட்டணியில் அமைந்திருக்கும் இக்கட்சி, மக்கள் மீது கவனம் செலுத்துகிறது. பதவியோடு இருக்கும் நாங்கள் யாரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்வதில்லை; மாறாக, பதவியில் இல்லாதவர்கள் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். மக்கள் இதை கருத்தில்கொண்டு, வரும் மே 4-ஆம் தேதி முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என்று நான் பெரிதும் நம்புகிறேன்", என்று ஷாரில் ஹம்டான் குறிப்பிட்டார்.

இந்த இடைத்தேர்தலில், தேசிய முன்னணியின் வேட்பாளரான முகமட் ஷாரின் முகமட் சைனை வெற்றிப்பெற செய்வதற்காக உதவும் எந்தவொரு தரப்பினரையும் தாம் வரவேற்பதாக ஷாரில் தெரிவித்தார்.

ஃப்பெல்டா சினி 5-இல், நேற்று, வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பிரச்சாரத்திற்குப் பின்னர், பெர்னாமாவிடம் ஷாரில் இவ்வாறு தெரிவித்தார். 

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க