Thursday, 02 Jul 2020
அரசியல்
26/06/2020 04:07 PM

ஈப்போ, 26 ஜூன் (பெர்னாமா) -- புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ.சிவசுப்ரமணியம் இன்று அதிகாரப்பூர்வமாக கெராக்கான் கட்சியில் இணைந்தார். 

பேரா மாநில ஜ.செ.க மக்கள் பிரதிநிதியான இவர், கடந்த மார்ச் 9-ஆம் தேதி அக்கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது மட்டுமின்றி PERIKATAN NASIONAL-லுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார். 

கடந்த மூன்று தவணைகளாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சிவசுப்பிரமணியம், இன்று காலை பேரா, விஸ்மா கெராக்கான் ஈப்போவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கெராக்கானில் தாம் இணைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

"இப்போது, ​​எனது போராட்டம் மக்களின் நலனை முன்னிறுத்தி தொடரும். மேலும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் புதிய பயணத்தை முன்னெடுப்பேன். எனது போராட்டத்திற்கு கெராக்கான் கட்சி புதிய பலமாக இருக்கும்", என்று அவர் தெரிவித்தார். 

தாம் மட்டுமின்றி புந்தோங் தொகுதியிலுள்ள மேலும் 21 கிளைகள் ஜசெகவை விட்டு கெராக்கானில் இணையவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இருந்தபோதிலும், பேரா மாநில மந்திரி புசார் அஹ்மாட் ஃப்பைசால் அசுமு-க்கும் மாநில PERIKATAN NASIONAL அரசாங்கத்திற்கும் தாம் தொடர்ந்து ஆதரவு நல்கி வருவதாகவும் சிவசுப்ரமணியம் குறிப்பிட்டார். 

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க