உலகம்

ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் - உலக சுகாதார நிறுவனம்

26/06/2020 01:13 PM

ஜெனிவா, 26 ஜூன் (பெர்னாமா) -- புதிய கொவிட்-19 நோய்ப் பரவாமல் தடுக்க ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். 

இந்நோய் இன்னும் பரவி வருவதோடு, மிகக் கொடியதாகவும், எளிதில் பாதிக்கக்கூடியதாகவும் இருப்பதால் உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரைசஸ் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். 

"இந்நோய்ப் பரவலை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கட்டுப்படுத்தி வந்தாலும், இக்கிருமி (மக்கள் மத்தியில்) இன்னும் இருக்கிறது. அது மிகக்கொடியது. இன்னும் அதிகமானோர் எளிதாகப் பாதிக்கப்படுகின்றனர்", என்று அவர் கூறியிருக்கிறார்.

புதிய கொவிட்-19 நோய்ப் பரவுவதற்கு மத்தியில், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து சில கட்டுப்பாட்டு தளர்வுகளை வழங்கி வருவதால் டெட்ரோஸ் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். 

அதோடு, இந்நோயைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய சில நாடுகளின் தலைமைத்துவத்திற்கு குறிப்பாக ஆப்பிரிக்கா, கெரிபியன் மற்றும் பசிபிக் நாடுகளுக்கு டெட்ரோஸ் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். 

அதுமட்டுமின்றி, இந்நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில், எந்தநாடு இதை வெற்றிகரமாக கண்டுபிடித்தது என்ற வேறுபாட்டைக் களைந்து, உலக நாடுகள் அரசியல் ஒத்துழப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

-- பெர்னாமா