Thursday, 02 Jul 2020
24/06/2020 06:43 PM

சிரம்பான்,  24 ஜூன் (பெர்னாமா) --  2020-ஆம் ஆண்டு பள்ளி தவணைக்கான அட்டவணையில் சில மாற்றங்கள் தொடர்பான பல்வேறு தரப்பினரின் கருத்துகள் மற்றும் புகார்கள் குறித்து மலேசிய கல்வி அமைச்சு விரைவில் விவாதித்தாலும், தற்போதைக்கு மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மீது, கே.பி.எம் அதிக கவனம் செலுத்தும். 

இவ்விவகாரம் குறித்த பல்வேறு கருத்துகள் பெறபட்டு வரும் நிலையில், நாட்டில் கொவிட்-19 நோய் சூழ்ந்திருக்கும் இச்சூழலில் மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மீது அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்று கல்வி துணை அமைச்சர், டத்தோ டாக்டர் மா ஹங் சூன் தெரிவித்திருக்கின்றார். 

நெகிரி செம்பிலானில் உள்ள அம்பாங்கன் தொழிற்திறன் கல்லூரியில் இன்று நிர்ணயிக்கப்பட்ட எஸ்ஓபி-யை பின்பற்றி தொடங்கிய பள்ளியின் முதல் நாளை பார்வையிட்ட பின்னர் நடைப்பெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளுக்கு, இரண்டாம் தவணை பள்ளி விடுமுறை ஒன்பது நாட்களில் இருந்து ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டது. 

ஆதோடு, குழு A மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கான இறுதி ஆண்டு விடுமுறைகள் 42 நாட்களில் இருந்து 14 நாட்களாக குறைக்கப்பட்டு இருக்கும் வேளையில், குழு B மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கான விடுமுறைகள் 41 நாட்களில் இருந்து 13 நாட்களாக குறைக்கப்பட்டு இருக்கின்றன. 

இந்நிலையில், எஸ்.பி.எம், எஸ்.வி.எம், எஸ்.டி.பி.எம், எஸ்.தி.எம் ஆகிய பொது தேர்வு வகுப்புகளின் செயல்பாடுகளைப் பொருத்தே, இதர மாணவர்களின் வகுப்புகள் திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று டாக்டர் மா கூறினார். 

-பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க