பொது

மதுபான விற்பனைக்கான புதிய உரிம விண்ணப்பங்கள் முடக்கம்

02/06/2020 09:13 PM

கோலாலம்பூர், 2 ஜூன் (பெர்னாமா) -- கோலாலம்பூரில்,  மதுபானங்கள் விற்பனைக்கான அனைத்து புதிய உரிம விண்ணப்பங்களை, கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம் உடனடியாக முடக்கம் செய்திருக்கிறது.  

உரிமமின்றி மதுபானங்களை விற்கும், எந்தவொரு கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிபிகேஎல் சிறிய வர்த்தக உரிமம் மற்றும் மேம்பாட்டுத் துறை, இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. 

ஒரு முறையான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்படும் வரை, மதுபான விற்பனைக்கான புதிய உரிமங்களை வழங்குவதை முடக்கம் செய்யுமாறு கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான் ஶ்ரீ அனுவார் மூசா, நேற்று திங்கட்கிழமை, அரசாங்கத்திற்கு பரிந்துரைச் செய்திருந்தார். 

மதுபோதையில் குறிப்பாக மரணம் விளைவிக்கும் வகையில் வாகனமோட்டுபவர்களை உட்படுத்திய சில சாலை விபத்துகள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இப்பரிந்துரை முன் வைக்கப்பட்டிருக்கிறது. 

-- பெர்னாமா