பொது

இஸ்லாமியத் திருமணத்திற்காக மாநிலம் கடந்து செல்ல அனுமதி

02/06/2020 05:16 PM

புத்ராஜெயா,  2 ஜூன் (பெர்னாமா) -- நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின்போது, இஸ்லாமியத் திருமணத்திற்காக மாநிலம் கடந்து பயணம் செய்ய அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது. 

இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறையைப் பின்பற்றி இந்த வைபவங்கள் நடத்தப்பட வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார். 

இஸ்லாமியத் திருமணத்திற்காக மாநிலம் கடந்து பயணம் செய்ய அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, இன்று நடத்தப்பட்டக் கூட்டத்தில் அதன் தேவைக் குறித்து அறிந்திருப்பதால், பிடிஆர்எம்-மின் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன், இஸ்லாமியத் திருமணத்திற்காக மாநிலம் கடந்து பயணம் செய்ய இக்கூட்டம் ஒப்புக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதோடு, நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஓ.பி-யைப் பின்பற்றி திறந்தவெளி இடங்களில் திருமணப் புகைப்படங்கள் எடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 

-- பெர்னாமா