பொது

குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட அனுமதி

02/06/2020 09:53 PM

புத்ராஜெயா,  2 ஜூன் (பெர்னாமா) -- செயல்படமால் இருக்கும் மீதமுள்ள 6,000 குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் செயல்படுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. 

செயல்படவிருக்கும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் செயல்பாட்டு தர விதிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார். 

''முழுமையான செயல்பாட்டுத் தர விதிமுறையை நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். தஸ்காவிற்கு குழந்தைகளை அனுப்புவது, போதிக்கும் நேரம், குழந்தைகளை மீண்டும் அழைத்து செல்வது போன்ற அனைத்து அம்சங்களும், அமைச்சு அறிமுகப்படுத்தியிருக்கும் செயல்பாட்டுத் தர விதிமுறையில் இருக்கிறது.'' என்று அவர் தெரிவித்தார் 

இதற்கு முன்னதாக, 304 குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டன. 

இதனிடையே, பல்வேறு அமைச்சுகளின் கீழ் செயல்படும் TADIKA மற்றும் TABIKA எனப்படும் பாலர் பள்ளிகள் அனைத்து, ஜூலை தொடங்கி செயல்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. 

இதற்கான எஸ்ஓபி-யை தயார் செய்வதில், கல்வி அமைச்சு ஒருங்கிணைப்பாளராக செயல்படும் என்று இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். 

-- பெர்னாமா