உலகம்

சில வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு

02/06/2020 04:32 PM

ஹாங்காங்,  2 ஜூன் (பெர்னாமா) -- ஹாங்காங் மீதான புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் குறித்த சீனாவின் அறிவிப்புக்கு, ஹாங்காங் தலைவர் கேரி லெம் (CARRIE LAM) ஆதரவு தெரிவித்திருக்கிறார். 

மேலும் ஹாங்காங் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிறுத்திக் கொண்டு, உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கலவரங்களை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சிக்க வேண்டும் என்று, கேரி லெம் சாடியுள்ளார். 

புதுடெல்லி

உலக அளவில், கொவிட்-19 நோயினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. 

நாள்தோறும் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வரும் சூழலில், பொருளாதார நடவடிக்கைகள் சிலவற்றை மீண்டும் தொடங்க இந்தியா தயாராகியுள்ளது. 

கொவிட்-19 நோயினால், இந்தியாவில் இதுவரை ஒரு லட்சத்து 99,343 பேர் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 5,610 பேர் பலியாகியிருக்கின்றனர். 

உலகம் முழுவதும் இதுவரை, 63,73, 523 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

இந்நோயினால் இதுவரை, 377,584 பேர் உயிரிழந்திருப்பதோடு, 29, 09,306 பேர் குணமடைந்திருக்கின்றனர். 

-- பெர்னாமா