BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
விளையாட்டு

சொந்த அரங்கில் தோல்வியுற்றது ஃலோன்

02/06/2020 03:47 PM

லெயிப்ஸிக்,  2 ஜூன் (பெர்னாமா) -- ஜெர்மனி பண்டஸ்லீகா கிண்ணப் போட்டியில், லெயிப்ஸிக் (LEIPZIG) 4-2 என்ற கோல்களில் COLOGNE-வைத் தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் மூன்றாம் நிலைக்கு முன்னேறி இருக்கிறது. 

சொந்த அரங்கில் தோல்வியுற்ற ஃலோன் (COLOGNE), 34 புள்ளிகளுடன் 11-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில், ஃலோன்முதல் கோலை அடிக்க, அடித்தடுத்த இரண்டு கோல்களை லெயிப்ஸிக் அடித்து முதல் பாதியை 2-1 என்ற நிலையில் முடித்தது. 

இரண்டாம் பாதியிலும், போடப்பட்ட மூன்று கோல்களில், லெயிப்ஸிக் இரண்டு கோல்களை அடித்து ஆட்டத்தை அதற்கு சாதகமாக முடித்துக் கொண்டது. 

புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பேயர்ன் முனிச் (BAYERN MUNICH)-க்கை நெருங்குவதில் குறியாக இருக்கும் லெயிப்ஸிக், அதன் நோக்கத்தில் தொடர்ந்து வெற்றிக்கண்டு வருகிறது. 

இதனிடையே, கொவிட்19 தாக்கத்தினால், 3 மாத இடைவெளிக்கு பிறகு, வரும் ஜூன் 11-ஆம் தேதி மீண்டும் தொடரவிருக்கும் லா லீகா கிண்ண ஆட்டங்களுக்குகாக ரியல் மாட்ரிட் (REAL MADRID) தொடர் பயிற்சிகளில் ஈடுப்படு வருகின்றது.

- பெர்னாமா