உலகம்

காங்கோவில் ஈராண்டுகளில் 2,243 பேர் தொற்று நோயால் பலி

02/06/2020 12:33 PM

ஜெனிவா, 2 ஜூன் (பெர்னாமா) -- காங்கோ ஜனநாயகக் குடியரசில் இரண்டாவது எபோலா நோய்ப் பரவியுள்ளதை அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரைசஸ் தெரிவித்திருக்கிறார். 

ஏற்கனவே, கொவிட்-19 நோய்த் தொற்றால் போராடும் அந்நாட்டு மக்களுக்கு இது மற்றொரு சுகாதாரப் பேரிடியாக அமைந்துள்ளதகாவும் அவர் சுட்டிக்காட்டினார். 

கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இத்தொற்றுநோயால் ஏறக்குறைய 2,243 பேர் இறந்துள்ளதாக குறிப்பிட்ட காங்கோ ஜனநாயகக் குடியரசு தலைவர், இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படவில்லை என்றும் கூறினார். 

இதனிடையே, ஈக்வேட்டர் (EQUATEUR) மாகாணத்தின்  மபண்டகா (MBANDAKA) அருகே ஆறு இறப்புச் சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளதாக காங்கோ சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார். 

-- பெர்னாமா