உயர்கல்வி விண்ணப்பங்களுக்கான முடிவு ஜூன் 3-ஆம் தேதி அறிவிக்கப்படும்

30/05/2020 07:53 PM

புத்ராஜெயா, 30 மே (பெர்னாமா) -- 2020/2021-ஆம் ஆண்டுக்கான, பொதுப் பல்கலைக் கழகங்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், மெட்ரிகுலேஷன், போலிடெக்னிக், பொதுத் திறன் பயிற்சி நிறுவனங்களுக்கு விண்ணப்பித்திருக்கும் எஸ்.பி.எம் முடித்த மாணவர்கள் அதற்கான முடிவுகளை ஜூன் 3-ஆம் தேதி அறிந்து கொள்ளலாம். 

மாணவர்கள் தங்களின் முடிவுகளை நண்பகல் 12 மணிக்கு மேல், UPUPocket 2.0 கைப்பேசி செயலி அல்லது பல்கலைக்கழகங்களின் அகப்பக்கங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். 

இவ்வாண்டு, மேற்கல்வி தொடர்வதற்கு, தகுதி பெற்ற சுமார் 205,972 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக, உயர் கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மேலும், உயர் கல்வி தொடர தகுதி பெறும் மாணவர்கள் குறிப்பிட்டக் காலத்தில், அதனைச் சரிப்பார்த்து ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 

இந்நிலையில், மேற்கல்வி தொடர்வதற்கு தகுதி பெறாத மாணவர்கள், இவ்வாண்டு ஜூன் 3-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதிக்குள், கீழ்கண்ட அகப்பக்கம் வாயிலாக, மேல் முறையீடு செய்யலாம். 

இது குறித்து மேல் விவரங்கள் பெறவிரும்பும் மாணவர்கள், உயர் கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளங்கள் அல்லது 03-8870 8200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

-- பெர்னாமா